வியாழன், 2 ஏப்ரல், 2009

ஹெகலின் இயங்கியல்

ஹெகலுக்கு முந்தைய இயக்கவியல் முரண்பாடுகளை சுட்டிக் காட்டினாலும் ஹெகலியம் மட்டுமே பிரபஞ்சத்தை முழுமையாக விவரித்து கூறுயது.

கான்ட் அறிவின் முரண்பாடுகளை வெளிக்கொணர முடியுமே தவிர தீர்க்க வியலாது என கூறுவார். கான்ட் புலன் கடந்த இயங்கியலைப் பற்றிப் பேசுவார். ஹெகல் அதை உலகப் பொருள்களுக்கும் விரிவுப்படுத்துவார்.

பிட்ச் இயங்கியலை உலகை விவரிப்பதற்கு பயன்படுத்துவார். அவரது இயங்கியல் மூன்று வளர்ச்சிக் கட்டங்களைக் கொண்டது. கருத்துரை, எதிர்கருத்துரை, இணைவாக்கம் ஆகியன வாகும். இதில் எதிர்கருத்துரை என்பது கருத்துரைக்கு எதிர்மறையானது. இணைவாக்கம் என்பது மேற்கண்ட இரு கூறுகளை இணைத்துக் கொண்டு உருவாகின்றது.

ஷெல்லிங் இயங்கியலின் மூன்று கட்ட வளர்ச்சிப் போக்குகளை விவரிப்பார். உலக வளர்ச்சிப் போக்கு மூன்று கட்டங்களைக் கொண்டது என்பார்.. முதலாவதாக செயல், இரண்டாவதாக எதிர் செயல் , மூன்றாவதாக இணைவாக்க செயல். செயல், எதிர்ச்செயல் ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாவதாக இணைவாக்கசெயல் உருவாகின்றது என கூறுவார்.

ஹெகல் மேற்கண்ட இருவரின் இயங்கியல் கூறுகளில் உள்ள குறைகளை விமரிசித்து முழுமையான உண்மையான இயங்கியலை வளர்தெடுப்பார்.

ஹெகலைப் பொருத்தவரை இயங்கியல் என்பது எதிர்மறைகளை உட்கிரகித்துக் கொண்ட இணைவாகும். ஹெகலின் இயக்கவியல் முரண்பாட்டு விதிகளை தன் அடிப்படையாக கொண்டுள்ளது. என்றாலும் ஹெகலின் முரண்பாட்டு விதிக்கும் எனைய அவருக்கு முந்தைய முரண்பாட்டு விதிக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உள.

ஹெகலின் முந்தைய முரண்பாட்டு விதி என்பது எதிர்மறைகளை முழுமையாக தனித்தனியானதாகவும், ஒன்றுக்கு ஒன்று தவிர்த்து இருப்பதாகக் காணப்பட்டது. அவை முரண்பட்ட எதிர்மறைகளின் ஒற்றுமையை அங்கீகரிக்கவில்லை. மாறாக ஹெகல் முரண்பாட்டை எதிர்மறைகளின் தீர்மானகரமான ஒற்றுமை என்று வரையறுப்பார். வேற்றுமைகளின் ஒற்றுமையை காண்பார்.

ஹெகலைப் பொருத்தவரை முரண்பாட்டு என்பது எதிர்மறையான கோட்பாடல்ல.. மாறாக எதிர்மறைகளின் ஒற்றுமை காணும் நேர்மறையான கோட்பாடாகும்.

கருத்துரை, எதிர்கருத்துரை, இணைவாக்கம் ஆகியவற்றின் மூன்று கட்ட வளர்ச்சிப் போக்கே இயங்கியல் ஆகும். இது அருவமானதிலிருந்து பருண்மையானதிற்கும், தீர்மானகரமற்றதிலிருந்து தீர்மானகர மானதிற்கும் ஆன வளர்ச்சிப் போக்காகும்.

இருப்பு- இன்மை-உருவாதல் என்ற மூன்று கட்ட வளர்ச்சியில் இருப்பு என்பது அருவமானதும், பூடகமானதும், தீர்மானகரமற்றதுமான ஒரு இனமாகும்.. இன்மை என்பது ஒரு சுதந்திரமான வகையினமன்று. மாறாக இருப்பு என்பது எதிர்மறையானதாகும். இன்மை என்ற கூறில் உல்ள எந்த குணங்களும் இருப்பு என்பதில் இருக்காது.

உருவாதல் என்பது இருப்பு, இன்மை ஆகிய இரண்டின் வழியாக உருவாகின்றது. இருப்பு என்பதுடன் ஒப்பிடுகையில் இன்மை என்பது பருண்மையானதாகும். இன்மை என்பதுடன் ஒப்பிடுகையில் உருவாதல் என்பது மிகவும் பருண்மையானதாகும்.

இம்மூன்றிற்குள் உள்ள இயங்கியல் இதோடு நிற்பதன்று. மேலும் மேலும் வளர்ச்சியடைந்து மற்றுமொரு மூன்றுகட்ட வளர்ச்சிப் போக்குகளைக் கடந்து மிகவும் பருண்மையான இனமாக அதாவது முழுமுதல் கருத்துக்கு வந்தடைகின்றது. முழுமுதல் கருத்தில் எல்லா வகையினங்களும் உள்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹெகலின் இயக்கவியல் இருப்பு என்பதிலிருந்து ஆரம்பித்து முழுமுதல் கருத்து வரை செல்கின்றது. அதோடு முடிகின்றது. இருப்பில் நிச்சயமற்ற தன்மை நிலவுகின்றது.

முழுமுதல் கருத்து என்பது இருப்பு என்பதிலிருந்து உள்ளடங்கிருக்கவில்லை என்றாலும் அது முழுமுதல் கருத்தாக வளர்ச்சியடைவதற்கான ஆற்றல் அதனுள் உள்ளது. முழுமுதல் கருத்து என்பது இருப்பு என்பதை உட்செறித்ததாகும்.

ஆகவே இருப்பு என்பது முழுமுதல் கருத்தாக வளர்ச்சியடைவது என்பது தற்செயலானதன்று. மாறாக அவசியமானது. இந்த முறையானது மேலோட்டமானதன்று. சிந்தனையின் தீர்மானகரமான தொன்றாகும்.

ஹெகலின் முறையானது லாஜிக் கையும் மெடாபிசிக்ஸையும் உள்ளடக்கியது. இவரது இயங்கியல் இரண்டையும் இணைக்கின்றது. ஆகவே அறிவதும் இருப்பும் ஒன்றேயாகும். அதே போல சிந்தனையும் பொருளும் ஒன்றே யாகும்..அகமும் புறமும் ஒன்றேயாகும். (ஜிலீமீ ஷிuதீழீமீநீt ணீஸீபீ ஷீதீழீமீநீt ணீக்ஷீமீsஹ்ஸீஷீஸீஹ்னீஷீus).

இயங்கியல் என்பது முழுமையானது; பிரபஞ்சம் தழுவியது; அறிவின் பாரிய சக் தியானது ஒவ்வொன்றிலும் பணியாற்றுகின்றது. இது அறிவின் இயக்கமாகும். உள்ளார்ந்து இருப்பதை வெளிக் கொணர்வதாகும்.. (வீனீனீமீபீவீணீநீஹ் ஐ னீமீபீவீணீநீஹ் யாக மாற்றுகின்றது.

இயங்கியல் என்பது எல்லா இயற்கைக் கூறுகளிலும் செயல்படுவதைக் காணலாம். ஹெகல் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை இயங்கியல் எனக் குறிப்பிட்டார். அவர் மனித நடவடிக்கைகளிலும் இயங்கியல் உள்ளதாக குறிப்பிடுவார். குறிப்பாக சட்டம் ஒழுக்கம் போன்றவற்றிலும் கூட இயங்கியல் உள்ளதாக குறிப்பிடுவார்.

வேதனை என்பதும் மகிழ்ச்சி என்பதும் ஒன்றை ஒன்று கடந்து செல்வன. மனித உணர்விலும் உடலிலும் இயங்கியல் தன்மை செயல்படுவதாகக் கூறுவார்.

சிந்தனையின் இயங்கியல் என்பது கற்பனையானதன்று. அது தற்செயலானது மன்று. அது காலத்தின் கட்டாயமானதாகும்.

இதன் வகையினங்கள் வெவ்வேறு தத்துவ முறைகளோடு தொடர்புடையன வாகும். அளவையியலின் இயங்கியல் என்பது இருப்பு என்ற வகை இனத்தோடு ஆரம்பிக்கின்றது. இது பண்டைய கிரேக்க தத்துவமான பிரமினிடிஸின் தத்துவ கருத்தாகும். உருவாதல் என்ற வகையினம் ஹெராக்லிடஸ் தத்துவ கோட்பாடாகும்.------------------------- என்பது அணுவாதிகளின் மையக் கருத்தாகும். சாரம் பற்றிய வகையினம் (நுண்பொருள்) ஸ்பினேசாவின் தத்துவ கோட்பாடாகும்.

இவ்வாறு கருத்து வள்ர்ச்சிப் போக்கின் இயங்கியல் என்பது வரலாற்றில் எவ்வாறு தத்துவக் கோட்பாடுகள் உருவாகின்றன என்பதோடு தொடர்பு உடையதாகும்.
கருத்து என்பது இருப்பிலிருந்து- பர்மனிடிஸ் தத்துவத்திலிருந்து பல்வேறு தத்துவ முறைகளோடு ஊடுருவிக் கடந்துச் சென்று ஹெகலது முழுமுதல் கருத்தாக வளர்ச்சிப் பெற்றது. இந்த முழுமுதல் கருத்து இதற்கு முந்தைய எல்லா முறைகளையும் உள்ளடக்கி கடந்து சென்ற கோட்பாடாகும்.

ஆகவே ஹெகலிய தத்துவம் இதற்கு முந்தைய எல்லா தத்துவங்களையும் உள்ளடக்கியதோடு கடந்தும் வந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் அது தத்துவ வரலாற்றை மொத்தமும் உட்செறித்தது எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக